×

தொண்டு நிறுவனங்களுக்கு அமேசான் தலைவர் மாஜி மனைவி 1.29 லட்சம் கோடி நன்கொடை

புதுடெல்லி:  அமேசான் நிறுவன தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து 1.29 லட்சம் கோடியை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் (55). இவர் இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பாக நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். மேலும், பெண் குழந்தை ஒன்றையும் தம்பதியர் தத்தெடுத்து வளர்த்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரலில் இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஜெப், தனது சொத்தில் 25 சதவீதத்தை மனைவி மெக்கின்சிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார். அதன்படி, ₹2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை மெக்கின்சிக்கு வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.

இதன் மூலம் அதிக தொகையை ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்ற பெருமையை பெசோஸ் பெற்றுள்ளார். அதேபோல் கமெக்கின்சியின் தற்போதைய சொத்து மதிப்பு மொத்தம் ₹2 லட்சத்து 59 ஆயிரம் கோடியாகும். இதில் இருந்து சரிபாதி தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதற்கு மெக்கின்சி முன்வந்துள்ளார். அதாவது, 1.29 லட்சம் கோடியை அவர் நன்கொடையாக வழங்குகிறார். இவருடைய நன்கொடை அறிவிப்பு, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன், எந்தவொரு தனிப்பட்ட மனிதரும் இவ்வளவு பெரிய தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்தது கிடையாது.

‘இருப்பது காலியாகும் வரை தந்து கொண்டே இருப்பேன்’

மெக்கின்சி கூறுகையில், “ நான் வாழ்வதற்கு தேவையானதை விட கூடுதலாகவும், பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அதிகமான சொத்துகள் என்னிடம் இருக்கிறது. எனது மனித நேய அணுகுமுறை தொடர்ந்து கொண்ேட இருக்கும். ஆனால், நான் அதுவரை காத்திருக்க மாட்டேன். என்னிடம் இருப்பது காலியாகும் வரை நான் தந்து கொண்டே இருப்பேன்,” என்றார்.


Tags : Amazon ,Maj ,charities , Amazon CEO Jeff Bezos, ex-wife MacKenzie Bezos pledges,fortune to charity
× RELATED கனடா விசா பெற்று தருவதாக அமேசான்...